பழகிய நட்புஎவன் செய்யும் – குறள்: 803

Thiruvalluvar

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
– குறள்: 803

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே
செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு
பயனற்றுப் போகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நெடுங்கால நண்பர் தம் நட்புரிமையாற் செய்தவற்றிற்குத் தாமே அவற்றைச் செய்தாற்போல உடம்படாவிடின்,பழைமையாக அவருடன் வந்த நட்பு என்ன பயன் படுவதாம்?



மு. வரதராசனார் உரை

பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?



G.U. Pope’s Translation

When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship’s use?

Thirukkural: 803, Familiarity, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.