மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
– குறள்: 34

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

G.U. Pope’s Translation

Spotless be thou in mind! This only merits virtue’s name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

 – Thirukkural: 34, Assertion of the strength of virtue, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.