குன்றின் அனையாரும் குன்றுவர் – குறள்: 965

Thiruvalluvar

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
– குறள்: 965

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.கலைஞர் உரை

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குடிப்பிறப்பால் மலை போல் உயர்ந்தோரும்; தாம் தாழ்தற் கேதுவான இழி செயல்களை ஒரு குன்றிமணியளவே செய்வாராயினும் தம் நிலையினின்றுந் தாழ்வர்.மு. வரதராசனார் உரை

மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.G.U. Pope’s Translation

If meanness. slight as ‘abrus’ grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought.

Thirukkural: 965, Honour, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.