நயன்இலன் என்பது சொல்லும் – குறள்: 193

Thiruvalluvar

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193

– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.



G.U. Pope’s Translation

Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.

 – Thirukkural: 193, Not Speaking Profitless Words, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.