புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் – குறள்: 966

Thiruvalluvar

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
– குறள்: 966

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.கலைஞர் உரை

இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன்மான மின்றித் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று நிற்கின்ற நிலை; இவ்வுலகத்து நிற்கும் புகழைத் தராது; மறுமையில் தேவருலகத்திற்குச் செலுத்தாது; இனி அது அவனுக்கு வேறு என்ன பயனைச் செய்யும்?மு. வரதராசனார் உரை

மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?G.U. Pope’s Translation

It yields no praise, nor to the land of Gods throws wide the gate;
Why follow men who scron, and at their bidding wait?

Thirukkural: 966, Honour, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.