அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் – குறள்: 706

Thiruvalluvar

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
– குறள்: 706

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரது
மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி போல; ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.மு. வரதராசனார் உரை

தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல். ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்G.U. Pope’s Translation

As forms around in crystal mirrored clear we find. The face will show what’s throbbing in the mind.

 – Thirukkural: 706, The Knowledge of Indication, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.