எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் – குறள்: 125

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள்: 125

– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு
செல்வமாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செருக்கின்றியடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; ஆயினும், அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.மு. வரதராசனார் உரை

பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.G.U. Pope‘s Translation

To all humility is goodly grace; but chief to them
With fortune blessed,,- ’tis fortune’s diadem.

 – Thirukkural: 125, The Possession of Self-restraint, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.