கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி – குறள்: 745

Thiruvalluvar

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்குஎளிதுஆம் நீரது அரண்.
– குறள்: 745

– அதிகாரம்:அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்
படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; சிறந்த கோட்டையரணாவது.



மு. வரதராசனார் உரை

பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையது அரண்.



G.U. Pope’s Translation

Impregnable, containing ample stores of food, A fort, for those within, must be a warlike station good.

 – Thirukkural: 745, The Fortification, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.