களித்துஅறியேன் என்பது கைவிடுக – குறள்: 928

Thiruvalluvar

களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
குறள்: 928

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;
காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளை மறைவாக உண்டுவருபவன், அதை யுண்ணாத வேளையில், நான் கள்ளுண்டறியேன் என்று தன்னை ஒழுக்கமுள்ளவனாகக் காட்டிக் கொள்வதை விடுக. பிறரறியின் இழிவென்று முன்பு தன் மனத்தில் மறைத்து வைத்திருந்த குற்றமும் மறுமுறை யுண்டபொழுதே முன்னினும் அதிகமாக வெளிப்பட்டுத் தோன்றும்.



மு. வரதராசனார் உரை

கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்’ என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.



G.U. Pope’s Translation

No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

Thirukkural: 928, Not Drinking Palm – Wine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.