இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் – குறள்: 545

Thiruvalluvar

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
– குறள்: 545

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு ; முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம்.



மு. வரதராசனார் உரை

நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.



G.U. Pope’s Translation

Were king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers ,there rich abundance crowns the fields.

 – Thirukkural: 545, The Right Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.