உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – குறள்: 598
– அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருட்பால்.
கலைஞர் உரை
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப்
பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஊக்கமில்லாத அரசரும், பெருஞ்செல்வரும் இவ்வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார்.
மு. வரதராசனார் உரை
ஊக்கம் இல்லாதவர், ‘இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் ‘ என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.
G.U. Pope’s Translation
The soulless man can never gain
Th’ ennobling sense of power with men.
– Thirukkural: 598, Energy, Health
Be the first to comment