இன்றும் வருவது கொல்லோ – குறள்: 1048

Thiruvalluvar

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. – குறள்: 1048

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,
தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நேற்றும் வந்து என்னைக் கொன்றதுபோலும் துன்புறுத்திய வறுமை; இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்!



மு. வரதராசனார் உரை

நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,)



G.U. Pope’s Translation

And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?

 – Thirukkural: 1048, Poverty, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.