இழைத்தது இகவாமைச் சாவாரை – குறள்: 779

Thiruvalluvar

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
– குறள்: 779

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் கூறின வஞ்சினம் தப்பாதவாறு, தம் குறிக்கோள் நிறைவேறாதவழிச் சாகவல்ல மறவரை; அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற்குரியார் இவ்வுவகத்தில் யார்தான்!



மு. வரதராசனார் உரை

தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?



G.U. Pope’s Translation

Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they’ve sworn?

 – Thirukkural: 779, Military Spirit, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.