நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் – குறள்: 1049

Thiruvalluvar

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது. – குறள்: 1049

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்;
ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத
ஒன்றாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது.



மு. வரதராசனார் உரை

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.



G.U. Pope’s Translation

Amid the flames sleep may men’s eyelids close,
In poverty the eye knows no repose.

 – Thirukkural: 1049, Poverty, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.