ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் – குறள்: 1012

Thiruvalluvar

ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல
நாண்உடைமை மாந்தர் சிறப்பு.
– குறள்: 1012

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான
தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க் கெல்லாம் பொதுவாக வுரியனவாம்; ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக வுரியதாம்.மு. வரதராசனார் உரை

உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.G.U. Pope’s Translation

Food, clothing and other things alike all beings own; By sense of shame the excellence of men is known.

 – Thirukkural: 1012, Shame, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.