இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய – குறள்: 41

Thiruvalluvar

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
.
– குறள்: 41

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்



கலைஞர் உரை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக
அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.



மு. வரதராசனார் உரை

இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.



G.U. Pope’s Translation

The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.

 – Thirukkural: 41, Domestic Life, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.