தகுதி எனஒன்றும் நன்றே – குறள்: 111

Thiruvalluvar

தகுதி எனஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
– குறள்: 111

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்கலைஞர் உரை

பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்
சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.மு. வரதராசனார் உரை

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.G.U. Pope’s Translation

If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -’tis man’s one highest gain.

 – Thirukkural: 111, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.