Thiruvalluvar
திருக்குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய – குறள்: 41

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. – குறள்: 41 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாகஅமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் – குறள்: 46

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்போஒய்ப் பெறுவது எவன். – குறள்: 46 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க – குறள்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. – குறள்: 43 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – குறள்: 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்தெய்வத்துள் வைக்கப் படும். – குறள்: 50 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – குறள்: 45 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் [ மேலும் படிக்க …]