என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் – குறள்: 771

Thiruvalluvar

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
– குறள்: 771

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனை
எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகைவீர்!; இதற்கு முன்பு என் தலைவனது வலிமையறியாது அவனுக்கு எதிர் நின்று போரேற்று அவன் வேலாற் கொல்லப்பட்டு பின்பு நடுக்கல்லில் நின்ற மறவர் பலராவர்; ஆதலால், நீவிரும் அவ்வாறு நடுகல்லில் நில்லாது உம் உடலோடு நிற்க விரும்பின், தலைவனெதிரே போரேற்று நிற்றலைத் தவிர்க.



மு. வரதராசனார் உரை

பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.



G.U. Pope’s Translation

Ye foes! Stand not before my lord! for many a one Who did my lord withstand, now stands in stone!

 – Thirukkural: 771, Military Spirit, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.