துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் – குறள்: 42

Thiruvalluvar

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. – குறள்: 42

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்கலைஞர் உரை

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; உண்பதற்கில்லாத வறியர்க்கும்: ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம்.மு. வரதராசனார் உரை

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.G.U. Pope’s Translation

To anchorites, to indigent, to those who’ve passed away, The man for household virtue famed is needful help and stay.

 – Thirukkural: 42, Domestic Life, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.