நிலைமக்கள் சால உடைத்துஎனினும் – குறள்: 770

Thiruvalluvar

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
– குறள்: 770

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டிருப்பினும்;தனக்குத் தலைவராகியவயவர் (வீரர்) இல்லாவிடத்துப் படை நிற்காது.



மு. வரதராசனார் உரை

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.



G.U. Pope’s Translation

Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.

 – Thirukkural: 770, The Excellence of an Army, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.