அருமறை சோரும் அறிவுஇலான் – குறள்: 847

Thiruvalluvar

அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
– குறள்: 847

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்கலைஞர் உரை

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத
அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய்காவாது வெளிவிட்டுவிடும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருங்கேட்டை வருவித்துக் கொள்வான்.மு. வரதராசனார் உரை

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.G.U. Pope’s Translation

From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery.

Thirukkural: 847, Ignorance, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.