அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் – குறள்: 843

Thiruvalluvar

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
– குறள்: 843

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்கலைஞர் உரை

எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; அதைச்செய்தற்குரிய பகைவராலுஞ் செய்தற் கியலாதாம்.மு. வரதராசனார் உரை

அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.G.U. Pope’s Translation

With keener anguish foolish men their won hearts wring, Than aught that even malice of their foes can bring.

Thirukkural: 843, Ignorance, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.