ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம் குன்றிக்கால்.
– குறள்: 14

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்கலைஞர் உரை

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.மு. வரதராசனார் உரை

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.G.U. Pope’s Translation

If clouds their wealth on waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.

 – Thirukkural: 14, The Excellence of Rain, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.