ஏவவும் செய்கலான் தான்தேறான் – குறள்: 848

Thiruvalluvar

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்
போஒம் அளவும்ஓர் நோய்
. குறள்: 848

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்கலைஞர் உரை

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு
அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புல்லறிவாளன் தனக்கு நன்மையானவற்றை அறிவுடையார் செய்யச்சொல்லினுஞ் செய்வதில்லை; தானாகவும் தனக்கு நன்மையானவற்றை அறிந்துகொள்வதில்லை; அத்தகையவன் உயிர் உடம்பினின்று நீங்குமளவும் அவனைத்தாங்கும் உறவினர்க்கெல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம்.மு. வரதராசனார் உரை

தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.G.U. Pope’s Translation

Advised, he heeds not: of himself knows nothing wise; This man’s whole life is all one plague until he dies.

Thirukkural: 848, Ignorance, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.