அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் – குறள்: 842

Thiruvalluvar

அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.
– குறள்: 842

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்கலைஞர் உரை

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புல்லறிவாளன் ஒருவனுக்கு ஒருபொருளை மனமகிழ்ந்து கொடுத்தல் நேரின்; அதற்குக் கரணியம் பெறுகின்றவன் செய்த முன்னை நல்வினையே யன்றி வேறொன்றுமன்று.மு. வரதராசனார் உரை

அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.G.U. Pope’s Translation

The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver’s penance bought.

Thirukkural: 842, Ignorance, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.