உளர்என்னும் மாத்திரையர் அல்லால் – குறள்: 406

Thiruvalluvar

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். – குறள்: 406

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.
காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.



மு. வரதராசனார் உரை

நூல்களைக் கல்லாதவர்; உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.



G.U. Pope’s Translation

‘They are’; so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought.

 – Thirukkural: 406, Ignorance, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.