அற்றார் அழிபசி தீர்த்தல் – குறள்: 226

அற்றார் அழிபசி தீர்த்தல்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப்பு உழி.
– குறள்: 226

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்கலைஞர் உரை

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.மு. வரதராசனார் உரை

வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.G.U. Pope’s Translation

Let men relieve the wasting hunger man endure;
For treasure gained thus finds he treasure-house secure.

 – Thirukkural: 226, Giving, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.