அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45

அன்பும் அறனும்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– குறள்: 45

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்கலைஞர் உரை

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும்.மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.G.U. Pope’s Translation

If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.

– Thirukkural: 45, Domestic Life, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.