பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் – சிறுவர் பகுதி

பசுவும் கன்றும்குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம்

பசுவும் கன்றும்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.


அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி


நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக் குட்டி.


முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி.Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.