மனநலத்தின் ஆகும் மறுமைமற்று – குறள்: 459

Thiruvalluvar

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.
– குறள்: 459

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு மனநன்மையால் மறுமையின்பம் உண்டாகும்: அதுவும் இனநன்மையால் வலியுறுதலையுடையதாம்.



மு. வரதராசனார் உரை

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.



G.U. Pope’s Translation

Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong;

 – Thirukkural: 459, Avoiding mean Associations, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.