ஆற்று பவர்க்கும் அரண்பொருள் – குறள்: 741

Thiruvalluvar

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
– குறள்: 741

– அதிகாரம்:அரண், பால்: பொருள்கலைஞர் உரை

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; மூவகை யாற்றலு முடையராய்ப் பிறர் நாட்டின்மேற் படையெடுத்துச்சென்று போர் செய்வார்க்கும் சிறந்த செல்வம்; அவ்வாற்றலின்றித் தம் பகைவர்க்கஞ்சித் தற்காப்புச் செய்வார்க்கும் சிறந்த செல்வம்.மு. வரதராசனார் உரை

(படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.G.U. Pope’s Translation

A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes.

 – Thirukkural: 741, The Fortification, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.