குடிமடிந்து குற்றம் பெருகும் – குறள்: 604

Thiruvalluvar

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு.
– குறள்: 604

– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும்.



மு. வரதராசனார் உரை

சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.



G.U. Pope’s Translation

His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive.

 – Thirukkural: 604, Unsluggishness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.