நல்குரவு என்னும் இடும்பையுள் – குறள்: 1045

Thiruvalluvar

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். – குறள்: 1045

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்கலைஞர் உரை

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல பெருந்துன்பங்கள் வந்து சேரும்.மு. வரதராசனார் உரை

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.G.U. Pope’s Translation

From poverty, that grievous woe,
Attendant sarrows plenteous grow.

 – Thirukkural: 1045, Poverty, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.