கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் – குறள்: 840

Thiruvalluvar

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
– குறள்: 840

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,
அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதையானவன் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் அவையின்கண் புகுதல்; கழுவித் துப்புரவு செய்யாத காலைத் தெய்வ நிலையமான கோவிற்குள் வைத்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.

Thirukkural: 840, Folly, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.