குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் குறள் படித்தேன்
குணமடைந்தேன் நான் – தூய
குருதி கொண்டேன் நான்!
உறுதி கொண்டேன் நான்!


குறள் படித்தேன் குறள் படித்தேன்
குறைக ளைந்தேன் நான் – மனக்
கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்
செழுமை பெற்றேன் நான்!


அறம் படித்தேன் பொருள்படித்தேன்
இன்பம் படித்தேன் – அறி
வின்பம் குடித்தேன் – உலகத்
துன்பம் துடைத்தேன்!


திறம் படைத்தேன் உரம் படைத்தேன்
திருக்குற ளாலே – முப்பால்
தருங் குற ளாலே – உலகு
ஒழுங்குற ளாலே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.