அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதே

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
– குறள்: 64

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்கலைஞர் உரை

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய
குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம்.மு. வரதராசனார் உரை

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்G.U. Pope’s Translation

Than God’s ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play’d.

– Thirukkural: 64, The Wealth of Children, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.