573 பணியிடங்கள் – சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்புகள் – கணிணி இயக்குபவர் / தட்டச்சர் / வாசிப்பாளர் / பரிசோதகர் / ஜெராக்ஸ் இயக்குபவர் பணிகள் (Recruitment in Madras High Court)

Recruitment in Madras High Court

சென்னை உயர் நீதிமன்றத்தில் 573 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் (Recruitment in Madras High Court) – கணினி இயக்குபவர் (Computer Operator), தட்டச்சர் (Typist), உதவியாளர் (Assistant), வாசிப்பாளர் (Reader) / பரிசோதகர் (Examiner), ஜெராக்ஸ் இயக்குபவர் (Xerox Operator) பணிகள்

சென்னை உயர் நீதிமன்றம், மொத்தம் 573 பணியிடங்களை நிரப்புவதற்காக (Recruitment in Madras High Court), இளநிலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

(1) கணினி இயக்குபவர் (Computer Operator) / தட்டச்சர் (Typist) பணிகளுக்கான விவரங்கள்

 • பதவிகள்: கணினி இயக்குபவர் (Computer Operator) / தட்டச்சர் (Typist)
 • மொத்த காலியிடங்கள்: 305 (கணினி இயக்குபவர் = 76, தட்டச்சர் = 229)
 • ஊதியம்: கணினி இயக்குபவர் = ரூ. 20,600 – ரூ. 65,500 (நிலை-10); தட்டச்சர் = ரூ. 19,500 – ரூ. 62,000 (நிலை – 8).
 • கணினி இயக்குபவர் (Computer Operator) பணிக்கான தகுதிகள்:
  • (A) கணினி அறிவியல் அல்லது கணினிப் பயன்பாடுகள் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு (அல்லது)
  • (B) (1) ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு (2) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து, அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து பெற்ற, கணினிப் பயன்பாடுகளில் பட்டயப் படிப்பு (Diploma in Computer Applications)
  • தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் (Typewriting) அரசு தொழில் தேர்வில் உயர் நிலை தேர்ச்சி (Higher Grade)
 • தட்டச்சர் (Typist) பணிக்கான கல்வித் தகுதிகள்:
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு
  • தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் கணினி அலுவலகத் தானியக்கச் சான்றிதழ் படிப்பு (Certificate Course of Computer on Office Automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பு-1: விண்ணப்பிக்கும் போது மேற்கண்ட கணினிச் சான்றிதழ் இல்லாதவர்கள், பணியில் சேர்ந்த பின்பு, தகுதிகாண் காலத்திற்குள் (Probation Period), இந்த சான்றிதழ் படிப்பு பயின்று தேர்ச்சி பெறலாம்.
  • குறிப்பு2: கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்ளுக்கு இந்தச் சான்றிதழ் படிப்பு தேவையில்லை.
 • இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 31-ஜூலை-2019

(2) உதவியாளர் (Assistant) / வாசிப்பாளர் (Reader) / பரிசோதகர் (Examiner) / ஜெராக்ஸ் இயக்குபவர் (Xerox Operator) பணிகளுக்கான விவரங்கள்

 • பதவிகள்: உதவியாளர் (Assistant) / வாசிப்பாளர் (Reader) / பரிசோதகர் (Examiner) / ஜெராக்ஸ் இயக்குபவர் (Xerox Operator)
 • மொத்த காலியிடங்கள்: 268 (உதவியாளர் = 119, வாசிப்பாளர் / பரிசோதகர் = 142, ஜெராக்ஸ் இயக்குபவர் = 7)
 • ஊதியம்: உதவியாளர் = ரூ. 20,000 – ரூ. 63,000 (நிலை-9); தட்டச்சர் = ரூ. 19,500 – ரூ. 62,000 (நிலை – 8); ஜெராக்ஸ் இயக்குபவர் = ரூ. 16,600 – ரூ. 52,400 (நிலை – 3);
 • உதவியாளர் பணிக்கான தகுதிகள்:
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு
  • தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் கணினி அலுவலகத் தானியக்கச் சான்றிதழ் படிப்பு (Certificate Course of Computer on Office Automation) முடித்தவர்கள் (அல்லது) கணினியில் பட்டயப் படிப்பு அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • வாசிப்பாளர் (Reader) / பரிசோதகர் (Examiner) / ஜெராக்ஸ் இயக்குபவர் (Xerox Operator) பணிக்கான தகுதி:
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு
 • இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 31-ஜூலை-2019

மேலும், மேலேயுள்ள அனைத்து பணிகளுக்கான, தேர்ந்தெடுக்கும் முறை, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களுக்கு, கீழ்க்கண்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிகாரப் பூர்வ இணைய முகவரியைப் பார்க்கவும்:

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு இணைய தளம் (https://www.mhc.tn.gov.in/)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.