வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661
விளக்கம்:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க …]
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. – குறள்: 659 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில்வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர். – குறள்: 1070 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளித்துக்கொண்டு ‘இல்லை’ என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ? ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment