சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
தமர்ஆகி தன்துறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். – குறள்: 529 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். ஞா. [ மேலும் படிக்க …]
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]
மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்சொல்லினான் தேறற்பாற்று அன்று. – குறள்: 825 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பிஎந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை;எத்தகைய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment