சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. – குறள்: 984 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோன்மை [ மேலும் படிக்க …]
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகைஅறியார் வல்லதூஉம் இல். – குறள்: 713 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் பேசும் [ மேலும் படிக்க …]
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment