கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்போஒய்ப் புறமே படும். – குறள்: 933 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. – குறள்: 858 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிறதிறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment