
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். – குறள்: 88
– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்
கலைஞர் உரை
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற்கொள்ளாதார்; அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலையானதென்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால், இன்று எமக்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லையென்று நொந்து கூறாநிற்பர்.
மு. வரதராசனார் உரை
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.
G.U. Pope’s Translation
With pain they guard thei stores, yet ‘All forlorn are we’ they’ll cry, Who cherish is not their guests, nor kindly help supply.
– Thirukkural: 88, Cherishing Guests, Virtues

 
		 
		
Be the first to comment