உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89

Thiruvalluvar

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
– குறள்: 89

– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்



கலைஞர் உரை

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்
எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; அது பேதையரிடத்திலேயே உள்ளது.



மு. வரதராசனார் உரை

செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்,அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.



G.U. Pope’s Translation

To turn from guests is penury, though wordly goods abound; ‘Tis senseless folly, only with senseless found.

 – Thirukkural: 89, Cherishing Guests, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.