பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை – குறள்: 61

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
– குறள்: 61

– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்கலைஞர் உரை

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத வேறு சிறந்தவற்றை, யாம் அறிந்ததில்லை.மு. வரதராசனார் உரை

பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.G.U. Pope’s Translation

Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

 – Thirukkural: 61, The Wealth of Children, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.