Thiruvalluvar
திருக்குறள்

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி – குறள்: 453

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்கூட்டத்தைப் பொருத்து அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தர்க்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்து உளதுபோலக் காட்டி – குறள்: 454

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துஉளது ஆகும் அறிவு. – குறள்: 454 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்வெளிப்படுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய சிறப்பறிவு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூய்மை செய்வினை தூய்மை – குறள்: 455

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனம்தூய்மை தூவா வரும். – குறள்: 455 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் – குறள்: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்குஇல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்நற்செயல்களும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் – குறள்: 457

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். – குறள்: 457 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோஎல்லாப் புகழையும் வழங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் – குறள்: 458

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 458 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ளகூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று – குறள்: 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. – குறள்: 459 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை – குறள்: 460

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் – குறள் : 452

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்குஇனத்துஇயல்பது ஆகும் அறிவு. – குறள் : 452 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிற்றினம் அஞ்சும் பெருமை – குறள்: 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள்: 451 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால்சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ்மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெரியார் [ மேலும் படிக்க …]