நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை – குறள்: 460

Thiruvalluvar

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
– குறள்: 460

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்கலைஞர் உரை

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் சிறந்த துணையுமில்லை; தீயினத்தினும் மிகுதியாகத் துன்புறுத்துவதும் இல்லை.மு. வரதராசனார் உரை

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.G.U. Pope’s Translation

Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe.

 – Thirukkural: 460, Avoiding mean Associations, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.