நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் – குறள் : 452

Thiruvalluvar

நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு. – குறள் : 452

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்



கலைஞர் உரை

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையதாம்; அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாம்.



மு. வரதராசனார் உரை

சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்



G.U. Pope’s Translation

The waters’ virtues change with soil through which they flow; As man’s companionship so will his wisdom show.

 – Thirukkural: 452, Avoiding mean Associations, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.