சிற்றினம் அஞ்சும் பெருமை – குறள்: 451

Thiruvalluvar

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
– குறள்: 451

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்கலைஞர் உரை

பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால்
சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ்
மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெரியார் சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர்; சிறியோரோ அக்கூட்டத்தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக்கொள்வர்.மு. வரதராசனார் உரை

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.G.U. Pope’s Translation

The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.

 – Thirukkural: 451, Avoiding mean Associations, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.