விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students)

விளையாட்டாய் கணிதம் கற்போம் - வகுப்பு 4 மற்றும் 5

விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students)

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் மாணவர்களுக்கு கணிதம் தொடர்பான கேள்வி பதில்களைக் குருவிரொட்டி தொடர்ந்து வெளியிடவுள்ளது. மாணவர்களே! அவ்வப்போது வெளியிடப்படும் வினா-விடைகளைப் படித்து பயன்பெறுங்கள்!

 1. ஒரு மீட்டர் (மீ) அளவில் எத்தனை சென்டிமீட்டர்கள் (செ.மீ) இருக்கும்?
  • விடை: 100 செமீ
 2. ஒரு சென்டிமீட்டர் அளவில் எத்தனை மில்லிமீட்டர்கள் (மி.மீ) இருக்கும்?
  • விடை: 10 மிமீ
 3. சென்னைக்கும் மதுரைக்கும் உள்ள தொலைவை எந்த அளவில் குறிக்கவேண்டும்?
  • விடை: கிலோமீட்டர் (கிமீ)
 4. ஒரு கிலோமீட்டர் (கிமீ) அளவில் எத்தனை மீட்டர்கள் (மீ) இருக்கும்?
  • விடை: 1000 மீ
 5. கீழேயுள்ள கடிகாரம் எத்தனை மணி மற்றும் நிமிடங்களைக் குறிக்கிறது?
  • இதற்கான விடையை நீங்களே கண்டறியுங்கள்!

clock

 1. எழிலன் ஒரு வட்டமான தோசையை நான்கு சம பங்குகளாகப் பிரித்து, அவன் நண்பன் வளவனுக்குக் கொடுக்கிறான். வளவனிடம் உள்ள தோசையின் பங்கு என்ன என்பதை பின்னத்தில் (Fraction) குறிக்கவும்?
  • விடை: 1/4 
 2. வளவனுக்கு ஒரு பங்கு கொடுத்தபின், எழிலனிடம் எவ்வளவு பங்கு மீதம் இருக்கும் என்பதை பின்னத்தில் (Fraction) குறிக்கவும்?
  • விடை: 3/4 
 3. கதிர் ஒரு வரிசையில் நிற்கிறான். அவனுக்கு முன்பக்கம் 12 பேர் மற்றும் பின்பக்கம் 12 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த வரிசையில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்? 
  • விடை: 25
 4.         ∇  = 6,   ∅  = 15,    ♠ = 10  எனில்,         – (2 x ) + (3 x ♠) = ?
  • விடை: 33
 5. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது பெரிய எண்?
  • (அ) 1/4       (ஆ) 1/32
  • விடை:   (அ) 1/4

 

(தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.